2023 ஆம் ஆண்டு ஜனவரி 13 முதல் 29 வரையில் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நடைபெற உள்ளது. மொத்தம் இரண்டு விளையாட்டு அரங்கில் போட்டிகள் நடைபெற உள்ளது. 16 நாடுகள் பங்கேற்று விளையாடுகின்றன.
இந்தியா தொடரை நடத்தும் அணியாக பங்கேற்கிறது.ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு உலக கோப்பை ஹாக்கி போட்டியை ஒடிசாவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. உலக கோப்பைஹாக்கி போட்டியில் அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது இந்திய அணி ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.
இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் வேல்ஸ் அணிகளுடன் ‘டி’ பிரிவில் இந்தியா உள்ளது. இந்த நிலையில் இந்த உலகக்கோப்பை ஹாக்கி போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.ஹர்மன்ப்ரீத் தலைமையிலான இந்திய ஹாக்கி அணியில் 18 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இந்திய அணி : கோல்கீப்பர் – கிரிஷன் பகதூர் பதக், ஸ்ரீஜேஷ் ரவீந்திரன் பின்களம் – ஜர்மன்பிரீத் சிங், சுரேந்தர் குமார், ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்), வருண் குமார், அமித் ரோஹிதாஸ் (துணை கேப்டன்), நிலம் சஞ்சீப் செஸ் நடுகளம் – மன்பிரீத் சிங், ஹர்திக் சிங், நீலகண்ட சர்மா, ஷம்ஷேர் சிங், விவேக் சாகர் பிரசாத், ஆகாஷ்தீப் சிங் முன்களம் – மந்தீப் சிங், லலித் குமார் உபாத்யாய், அபிஷேக், சுக்ஜீத் சிங்