கனடாவின் ஒன்றாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் பனிப்புயல் வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பனிப்புயல் காரணமாக விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டதுடன் பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.
மேலும் பாரியளவில் மின்சாரம் தடைப்படும் சாத்தியங்கள் காணப்படுவதாக கனேடிய சுற்றாடல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒரு தசாப்தத்திற்கு ஒரு தடவை ஏற்படக்கூடிய அபாயகரமான பனிப்புயல் நிலைமையை எதிர்நோக்க நேரிடலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மிகக் கடுமையான குளிர் நிலவும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மணிக்கு 100 கிலோ மீற்றர் அளவில் காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.