சீரற்ற காலநிலை காரணமாக ரயில் பயணிகள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நத்தார் பண்டிகை காலத்தில் இவ்வாறு பயணிகள் பெறும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.
பனிப்புயல் காரணமாக ரணில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சில இடங்களில் பயணிகள் 18 மணித்தியாலங்கள் ரயிலிலேயே காத்திருக்க நேரிட்டுள்ளது.
மரம் முறிந்து வீழ்ந்த காரணத்தினால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டுள்ளது.
பயணிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.