தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவலின்படி திருகோணமலைக்கு வடகிழக்கே 370 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் குறித்த காற்றழுத்த தாழ்வு நிலை இலங்கையை கடக்க வாய்ப்புள்ளது.
இதனால், இன்று (24) மற்றும் அடுத்த சில தினங்களில் (25 மற்றும் 26) நாட்டின் பல பகுதிகளில் மழை மற்றும் காற்றின் நிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.