Home இந்தியா 125 அரங்குகள் அமைக்கப்பட்டு ஏராளமான புத்தகங்கள் விற்பனைக்கு

125 அரங்குகள் அமைக்கப்பட்டு ஏராளமான புத்தகங்கள் விற்பனைக்கு

by Jey

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்க மைதானத்தில் முதலாவது புத்தக திருவிழா-2022, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

காஞ்சீபுரம் மாவட்ட மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவி்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து, நடத்தும் முதலாவது புத்தக திருவிழா தொடங்கப்பட்டுள்ளது.

வருகிற 2-ந்தேதி வரை புத்தக திருவிழா நடக்கிறது. புத்தக கண்காட்சியானது நாள்தோறும் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளது.

இதில் தென்னிந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு பதிப்பாளர்கள் மற்றும் புத்தக வெளியீட்டாளர்கள் கலந்து கொள்ளும் வகையில் 125 அரங்குகள் அமைக்கப்பட்டு ஏராளமான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

தொடக்க விழா நிகழ்ச்சியில் உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ. க.சுந்தர், காஞ்சீபுரம் தொகுதி எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலா் சிவருத்ரய்யா, காஞ்சீபுரம் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பி.ஸ்ரீதேவி, காஞ்சீபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், காஞ்சீபுரம் மாவட்ட ஒன்றிய குழு துணைத்தலைவர் நித்தியா சுகுமார், காஞ்சீபுரம் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

related posts