கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பஸ் ஒன்று குடை சாய்ந்ததில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பிரிட்டிஸ் கொலம்பியாவின் லூன் லேக் நுழைவாயில் பகுதியில் காணப்படும் 97சீ நெடுஞ்சாலையில் விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் மொத்தமாக 52 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்கள் அருகாமையில் அமைந்துள்ள நான:கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பனிப்பொழிவு காரணமாக இவ்வாறு பஸ் விபத்துக்கு உள்ளாகியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.