Home கனடா கியூபெக், ஒன்றாரியோ மக்கள் பனிப்புயலினால் தொடர்ந்தும் பாதிப்பு

கியூபெக், ஒன்றாரியோ மக்கள் பனிப்புயலினால் தொடர்ந்தும் பாதிப்பு

by Jey

கியூபெக் மற்றம் ஒன்றாரியோ மாகாண மக்கள் பனிப்புயல் காரணமாக தொடர்ந்தும் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

பனிப்புயல் காரணமாக இந்த மாகாணங்களைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலான மின்சார வாடிக்கையாளர்கள் மின் இணைப்பை இழந்துள்ளனர்.

கிறிஸ்மஸ் பண்டிகை முன்னர் இருந்தே பல்லாயிரக் கணக்கானவர்கள் மின்சார வசதியின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

மின்சார இணைப்பை மீள வழங்குவதற்காக கடுமையான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறெனினும் இன்னமும் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இருளில் மூழ்கியுள்ளனர்.

related posts