Home இலங்கை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அனுமதி……..?

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அனுமதி……..?

by Jey

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி முறையைப் பயன்படுத்துவதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (28) கைச்சாத்திடப்பட்டுள்ளது.

பெயர், வயது, இருப்பிடம் போன்ற தகவல்களை மாற்றி, போலியான அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டை தயாரித்து வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாடுகளுக்குச் செல்லும் நபர்கள் தமது உண்மைத் தகவல்களை மாற்றி போலியான பிறப்புச் சான்றிதழ்கள், அடையாள அட்டைகள் மற்றும் கடவுச்சீட்டுகளைத் தயாரித்து பல்வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டு வெளிநாடுகளுக்குச் செல்லும் சம்பவங்கள் அடிக்கடி இடம்பெற்று வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இன்று கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு இணங்க ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பைப் பார்க்கவும் மற்றும் ஒரு நபரின் தனிப்பட்ட விவரங்களை ஒரே நேரத்தில் உறுதிப்படுத்தவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் மகேந்திர குமாரசிங்க, பணிப்பாளர் சபை உறுப்பினர் ஜெஃப் குணவர்தன மற்றும் ஆட்கள் பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் வியானி குணதிலக்க ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.

related posts