ஜப்பானில் புகுஷிமா மற்றும் பிற பேரிடர் பாதித்த பகுதிகளின் மறுசீரமைப்பு துறையின் மந்திரியாக இருந்து வந்த கென்யா அகிபா, அரசியல் மற்றும் தேர்தல் நிதிகளை தனது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையடுத்து அவரை மந்திரி பதவியில் இருந்து நீக்க பிரதமர் புமியோ கிஷிடா முடிவு செய்தார். இதை அறிந்து கொண்ட கென்யா அகிபா நேற்று பிரதமரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
கடந்த 2 மாதங்களில் புமியோ கிஷிடாவின் மந்திரி சபையில் இருந்து நீக்கப்பட்ட 4-வது மந்திரி இவர் ஆவார்.