Home விளையாட்டு தமிழகம்- டெல்லி அணிகள் இடையிலான லீக் ஆட்டம்

தமிழகம்- டெல்லி அணிகள் இடையிலான லீக் ஆட்டம்

by Jey

38 அணிகள் பங்கேற்றுள்ள 88-வது ரஞ்சி கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

இதில் தமிழகம்- டெல்லி அணிகள் இடையிலான லீக் ஆட்டம் ( பி பிரிவு) டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடக்கிறது. முதலில் பேட் செய்த டெல்லி அணி தொடக்க நாளில் 6 விக்கெட்டுக்கு 212 ரன்கள் எடுத்திருந்தது.

2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய டெல்லி அணி முதல் இன்னிங்சில் 303 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. எல்.விக்னேஷ், சந்தீப் வாரியர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அடுத்து தனது முதல் இன்னிங்சை விளையாடிய தமிழக அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சாய் சுதர்சன் 25 ரன்னிலும், ஜெகதீசன் 34 ரன்னிலும் விக்கெட் கீப்பர் அனுஜ் ரவாத்திடம்

இதைத் தொடர்ந்து பாபா சகோதரர்கள் அபராஜித்தும் (57 ரன்), கேப்டன் இந்திராஜித்தும் (71 ரன்) அரைசதம் அடித்து நல்ல நிலைக்கு கொண்டு வந்தனர்.

ஆனால் இவர்கள் வெளியேறியதும் தமிழக அணி சற்று தடுமாறிப் போனது. ஆட்ட நேர முடிவில் தமிழக அணி 54 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 214 ரன்கள் சேர்த்துள்ளது.

3-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது. மும்பையில் நடக்கும் சவுராஷ்டிராவுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி முதல் இன்னிங்சில் 230 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

சூர்யகுமார் யாதவ் 95 ரன்கள் (107 பந்து, 14 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசினார். கேப்டன் ரஹானே 24 ரன்னில்

related posts