Home இந்தியா விடுமுறையில் உள்ள ஊழியர்களை தொந்தரவு செய்தால் …..?

விடுமுறையில் உள்ள ஊழியர்களை தொந்தரவு செய்தால் …..?

by Jey

ஐடி ஊழியர்கள் பெரும்பாலும் வருடத்தின் எல்லா நாட்களிலும் வேலை செய்வார்கள். அவர்களுக்கு இருக்கும் அதிகப்படியான வேலை அழுத்தம் காரணமாக அவர்களால் விடுமுறை நாட்களில் கூட நிம்மதியாக ஓய்வு எடுக்கமுடியாத சூழல் இருக்கும்.

குறிப்பாக அவர்களின் உயர் அதிகாரிகள் காலம் நேரம் பார்க்காமல் எந்த நேரத்திலும் தொலைபேசியில் அழைத்து வேலை செய்ய கூறுவார்கள். ஒரு சிலர் குடும்ப சூழ்நிலையை நினைத்து இவர்களும் வாங்கும் சம்பளம் நிலைக்கவேண்டும் என்பதற்காக அனைத்தையும் சகித்துக்கொண்டு பணியாற்றுவார்கள்.

பலர் இதன் காரணமாக குடும்பத்துடன் நேரம் செலவழிக்கமுடியாமல் அதிகப்படியான மன அழுத்தத்தில் வேலை செய்வதாக பல ஐடி ஊழியர்கள் நண்பர்களிடம் கூறி புலம்பி தள்ளுவார்கள். இந்தநிலையில் இதற்கு புதிய தீர்வு ஒன்றை இந்தியாவை சேர்ந்த ஐடி நிறுவனமான ட்ரீம் 11 நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

இதில் அந்த நிறுவனத்தில் விடுமுறையில் உள்ள ஊழியர்களை தொந்தரவு செய்தால் அவர்களுக்கு ரூ.1 லட்சம் ரூபாய் அபராதம் என்று அறிவித்துள்ளது.

related posts