ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் எரிபொருட்களின் விலைகள் உயர்வடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டில் ஒன்றாரியோவில் பெற்றோல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்வடைந்திருந்தது.
இந்த விடுமுறைக் காலத்தில் சாரதிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் எரிபொருள் விலை குறைவடைந்துள்ள போதிலும் எதிர்வரும் காலங்களில் மீளவும் விலை உயர்வடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
எரிபொருள் துறைசார் வல்லுனர்களினால் இந்த எதிர்வுகூறல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒரு லீற்றர் பெற்றோலின் விலை சராசரியாக இரண்டு டொலர்கள் வரையில் மீளவும் அதிகரிக்கும் சாத்தியம் உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.