Home இலங்கை நிவாரணம் வழங்கும் சமூக சமையலறை

நிவாரணம் வழங்கும் சமூக சமையலறை

by Jey

இலவச உணவு வழங்கும் சமையலறை திட்டம் ஒன்று கொழும்பு, கொம்பனிய தெரு பொலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 2500 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் சமூக சமையலறை வேலைத்திட்டம் கொழும்பு ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையில் ஆரம்பிக்கப்பட்டது.

உணவு கிடைப்பதில் சிரமப்படும் ஹுனுப்பிட்டிய, கொம்பனிய தெரு, காலி முகத்திடல், இப்பன்வல, வேகந்த ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளை இலக்காகக் கொண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் 40 நாட்களுக்கு இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்குதல், தொழில்சார் பயிற்சிகளை வழங்குதல், சமூக அபிவிருத்தி போன்ற நலன்புரி வேலைத்திட்டங்களின் ஊடாக மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

முப்படைகள், பொலிஸ், சிவில் பாதுகாப்பு திணைக்களம், அரச நிறுவனங்கள் மற்றும் சர்வதேச சங்கங்கள் , மற்றும் பல தனியார் அமைப்புகளின் ஒத்துழைப்புடன் ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் கங்காராம விகாரை பங்களிப்பாளர்களின் பங்களிப்புடன் இந்த சமூக சமையலறை இயங்கி வருகின்றது.

related posts