Home கனடா கனடாவில் சம்பள இடைவெளி அதிகரிப்பு

கனடாவில் சம்பள இடைவெளி அதிகரிப்பு

by Jey

கனடாவில் நிறைவேற்று தரத்தைச் சேர்ந்த அதிகாரிகளுக்கும் சாதாரண ஊழியர்களுக்கும் இடையிலான சம்பள இடைவெளி வெகுவாக உயர்வடைந்துள்ளது.

பிரதம நிறைவேற்று அதிகாரி அல்லது தலைவர் போன்ற பதவிகளை வகிப்பவர்கள் பெருந்தொகை பணத்தை வருமானமாக ஈட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய தினம் வருடம் ஆரம்பித்து ஒரு மணித்தியல இடைவெளியிலேயே கனடாவின் சாதாரண ஊழியர் ஒருவர் உழைக்கும் மாதச் சம்பளத்தை நிறைவேற்று அதிகாரிகள் சராசரியாக வருமானம் பெற்றுக்கொள்கின்றனர்.

சாதாரண ஓர் ஊழியரின் வருடாந்த சராசரிச் சம்பளம் 58800 ரூபா எனத் தெரிவிக்கப்படுகின்றது.

நிறைவேற்று தரத்தில் உள்ள அதிகாரிகளின் வருடாந்த சராசரிச் சம்பளம் சாதாரண ஊழியரின் சராசரி சம்பளத்தை விடவும் 243 மடங்கு அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

related posts