Home இந்தியா பல்வேறு அமர்வுகளில் பல்வேறு தலைப்புகளில் 100 இலக்கிய ஆளுமைகள் பங்கு

பல்வேறு அமர்வுகளில் பல்வேறு தலைப்புகளில் 100 இலக்கிய ஆளுமைகள் பங்கு

by Jey

அண்ணாநகர் அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் சென்னை இலக்கிய திருவிழா 2023-ஐ முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான இலக்கிய போட்டிகள், பயிற்சி பட்டறைகள் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழாவில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- சென்னை இலக்கியத் திருவிழா வரும் 6-ந்தேதி முதல் 8-ந் தேதி வரை 3 நாட்கள் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற உள்ளது.

இதில் 100 இலக்கிய ஆளுமைகள் பல்வேறு தலைப்புகளில், பல்வேறு அமர்வுகளில் பங்குபெறுகிறார்கள். தமிழகத்தின் கலை இலக்கிய வரலாற்றையும் நம் பண்பாட்டையும் அடுத்த தலைமுறையினரிடம் எடுத்துச்சென்று அவர்கள் மூலம் அதை உலகம் அறியச் செய்வதற்கான இந்த முயற்சி நிச்சயமாக வெற்றிபெறும்.

கழகத்தில் இளைஞர் அணி செயலாளராகவும், இளைஞர் நலன் சார்ந்த அமைச்சராகவும் இருப்பதால் நம் வரலாற்றை, கலையை, பண்பாட்டை அடுத்தத் தலைமுறையினரிடம் நகர்த்த வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது.

related posts