Home இலங்கை ஜனாதிபதிக்கும்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை

ஜனாதிபதிக்கும்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை

by Jey

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் நாளை (05.01.2023) விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.

இந்த கலந்துரையாடலில் 13ஆம் திருத்தச் சட்டம், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு, அரசியல் கைதிகள் விடுதலை உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சந்திப்பில் அரசாங்கம் சார்பில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, அலி சப்ரி மற்றும் விஜயதாச ராஜபக்ச ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.

எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளுடனும் சந்திப்பு நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

related posts