கனடிய நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப் போவதாக மிரட்டிய 19 வயதான இளைஞர் ஒருவரை கனடிய போலீசார் கைது செய்துள்ளனர்.
கனடிய நாடாளுமன்றம், கனடாவிற்கான சீன மற்றும் அமெரிக்க தூதரகங்கள், கனடிய பாதுகாப்பு மையம் என்பனவற்றின் மீது தாக்குதல் நடத்தப் போவதாக குறித்த இளைஞர் மிரட்டல் விடுத்துள்ளார்.
twitter பதிவுகள் மூலம் குறித்த இளைஞர் இவ்வாறு மிரட்டல் விடுத்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
கனடாவின் ஒட்டோவா நகரை சேர்ந்த 19 வயதான டேனியல் ஹுடோ என்ற இளைஞரை பொலிஸார் இவ்வாறு கைது செய்துள்ளனர்.
குறித்த இளைஞருக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட இளைஞர் நிபந்தனை பிணை அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 18 ஆம் திகதி குறித்த இளைஞர் நீதிமன்றில் முன்னிலையாகுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.