கனடாவில் குடிப்பெயர்வாளர்களுக்கு கூடுதல் சந்தர்ப்பம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் கனடாவில் 431645 பேர் குடிப்பெயர்ந்துள்ளனர்.
இது கடந்த 2021ம் ஆண்டை விடவும் அதிகளவு எண்ணிக்கையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் நிலவி வரும் கடுமையான ஊழியவளப் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் நோக்கில் இவ்வாறு குடிப்பெயர்வாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.
இந்த ஆண்டில் 465000 குடிப்பெயர்வாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாகவும், அடுத்த 2024ம் ஆண்டில் 485000 குடிப்பெயர்வாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2025ம் ஆண்டில் 500,000 குடிப்பெயர்வாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என கனேடிய குடிவரவு மற்றும் ஏதிலிகள் விவகார அமைச்சர் சீன் ப்ரேசர் தெரிவித்துள்ளார்.