Home இலங்கை எதிர்காலத்தில் நாட்டில் மற்றொரு கோவிட் அலை

எதிர்காலத்தில் நாட்டில் மற்றொரு கோவிட் அலை

by Jey

இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் மற்றொரு கோவிட் அலை உருவாகுமானால் நிலைமை மிகவும் மோசமாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய நிலவரப்படி எதிர்காலத்தில் நாட்டில் மற்றொரு கோவிட் அலை உருவாகுமானால், நிலைமை மிகவும் மோசமாகும்.

நாட்டில் உள்ள மருந்துகள் மற்றும் அதிகாரிகளின் பற்றாக்குறையே அந்த நிலைமைக்கு முக்கிய காரணம். பல நாடுகளில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் அதிகரித்து வருகின்றன.

இலங்கையில் மீண்டும் ஒரு தொற்றுநோய் நிலைமை உருவாகினால் அதனைக் கட்டுப்படுத்துவது கடினமாகும். சுகாதார சேவைகள் சரிவு, மருந்துகள் – மருத்துவமனை வசதிகள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை ஆகியவற்றுடன் நிலைமை மோசமாகக்கூடும்.

இதன் காரணமாக, கோவிட் பரவினால் ஒரு துரதிஷ்டவசமான சூழ்நிலை உருவாகும். அவ்வாறான நிலையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கான வசதிகளை ஏற்படுத்துமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

related posts