சீனா தனது கடுமையான பூஜ்ஜிய-கொரோனா கொள்கையை டிசம்பரில் நீக்கியது இதனால் நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சுடுகாடுகள் நிரம்பி வழிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
40 வயதான பாடகியான ஓபரா சு லான்லன் கடந்த மாதம் இறந்தது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஆனால் அவரது மரணத்திற்கான காரணம் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
சீனா தினசரி கொரோனா புள்ளி விவரங்கள் வெளியிடுவதை நிறுத்தியுள்ளது, மேலும் டிசம்பர் முதல் 22 கொரோனா இறப்புகளை மட்டுமே அறிவித்துள்ளது. இப்போது, நிமோனியா போன்ற சுவாச நோய்களால் இறப்பவர்கள் மட்டுமே கணக்கிடப்படுகிறார்கள்.
பிரபல பாடகி சு லான்லான் மற்றும் பிறரின் மரணம் அதிகாரபூர்வ கணக்குகளில் பதிவானதை விட பெரிய இழப்புகள் பற்றிய ஊகங்களைத் தூண்டுகிறது என்று பிபிசி தெரிவித்துள்ளது. அதுபோல் புத்தாண்டு தினத்தன்று, நடிகர் கோங் ஜிண்டாங் பலியானார் என்று பிபிசி தெரிவித்துள்ளது.
83 வயதான காங், நாட்டின் மிக நீண்ட தொலைக்காட்சித் தொடரான ‘இன்-லாஸ், அவுட்-லாஸ்’ இல் நடித்ததில் பிரபலமானவர். அவரது மரணத்திற்கான காரணம் தெளிவாக இல்லை, ஆனால் மற்ற வயதானவர்களின் சமீபத்திய இறப்புகளுடன் இணைத்துள்ளனர் என்று பிபிசி தெரிவித்துள்ளது.