ஒன்றாரியோ மாகாணத்தின் மிஸ்ஸிசாகுவாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பிரதான நீர் குழாய் ஒன்றில் ஏற்பட்ட கசிவினால் இந்த வெள்ளப்பெருக்கு நிலைமை உருவாகியுள்ளது.
இதனால் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மிஸ்ஸிசாகுவாவின் லேக்ஸோர் வீதியில் தங்களது இடுப்பு அளவிற்கு நீர் மட்டம் காணப்படும் காட்சிகளை பீல் பிராந்திய பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
டுவிட்டர் பதிவொன்றின் மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சில வாகனங்கள் நீரில் சிக்கியிருக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
இந் வெள்ளம் காரணமாக எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என பொலிஸார் அறிவித்துள்ளனர்.