Home இலங்கை ரெயில்வேக்கு சொந்தமான 29 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்த பொதுமக்கள்

ரெயில்வேக்கு சொந்தமான 29 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்த பொதுமக்கள்

by Jey

இந்திய ரெயில்வேக்கு சொந்தமான உத்தரகாண்ட் மாநிலம் நைனிதல் மாவட்டத்தில் ஹல்துவானி நகரத்தில் பொதுமக்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து குடியேறியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இந்திய ரெயில்வேக்கு சொந்தமான 29 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து சுமார் 4 ஆயிரம் குடும்பங்கள் பல ஆண்டுகள் வசித்து வருகின்றன.

இந்த பகுதியில் பள்ளிக்கூடங்கள், இஸ்லாமிய மத வழிபாட்டு தலங்கள், இந்து மத வழிபாட்டு தலங்கள், வங்கிகள் என பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

இந்த பகுதியில் மொத்த மக்கள் தொகை 50 ஆயிரத்திற்கும் அதிகம் ஆகும். இப்பகுதியில் இஸ்லாமிய மதத்தினர் பெரும்பான்மையாக வசித்து வரும் நிலையில் ரெயில்வே நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக 2013-ம் ஆண்டு உத்தரகாண்ட் கோர்ட்டில் வழக்குத்தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ரெயில்வேக்கு சொந்தமான நிலம் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அதை உடனடியாக காலி செய்து நிலத்தை ரெயில்வே மீட்டுக்கொள்ளலாம் என தீர்ப்பளித்து.

 

related posts