Home கனடா வெளிநாடு சென்ற தம்பதியினரை வீட்டை மோசடியாக விற்பனை செய்த கும்பல்

வெளிநாடு சென்ற தம்பதியினரை வீட்டை மோசடியாக விற்பனை செய்த கும்பல்

by Jey

வெளிநாடு சென்ற தம்பதியினரின் வீடு ஒன்றை மோசடியான முறையில் விற்பனை செய்த சம்பவமொன்று கனடாவில் பதிவாகியுள்ளது.

வியாபார நோக்கத்திற்காக வெளிநாடு சென்ற தம்பதியினரின் வீடு ஒன்றை, ஓர் ஆணும் ஓர் பெண்ணும் விற்பனை செய்துள்ளனர்.

போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி இந்த வீடு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

வேறு ஒருவரின் வீட்டை தமது வீடு என்ற போர்வையில் விற்பனை செய்த குறித்த ஆணும் பெண்ணும் தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வீடு விற்பனை செய்யப்பட்ட சில மாதங்களின் பின்னரே தமது வீடு மோசடியான முறையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பதனை வீட்டு உரிமையாளர்கள் அறிந்து கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

related posts