பார்-டெயில் காட்விட் என்ற பறவை அலாஸ்காவிலிருந்து ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியாவுக்கு 8,435 (13,575 கிமீ) மைல்கள் இடைவிடாமல் பறந்து சாதனை படைத்துள்ளது. வட அமெரிக்க மேற்கு பகுதியில் உள்ள அலாஸ்காவில் பார்-டெயில் காட்விட் என்ற பறவை இனம் இருக்கிறது.
இந்த பறவி குளிர் காலத்தில் பனி அதிகம் ஆகும் நேரம் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து பகுதிக்கு இடம் பெயர்வது வழக்கம் ஆகும். மற்ற பறவை இனங்களை போல் இது அடிக்கடி இடையே ஓய்வெடுக்காது. எப்போதாவது தரையிறங்கும் என்றும் கூறப்படுகிறது.
ஒருவேளை தரையிறங்கினாலும், இது தண்ணீரில் தரை இறங்காது. அதற்கு மிக முக்கிய கரணம், அதன் உடல் அமைப்பு தான்.
இதன் உடலமைப்பு தண்ணீரில் மிதக்க ஏற்றது அல்ல. அதனால் தண்ணீரில் தெரியாமல் விழுந்தால் கூட பறவைக்கு இறப்பு தான். இதனாலேயே இந்த பறவை நீண்ட தூரம் நிற்காமல் பறக்கும்.
கின்னஸ் உலக சாதனைகளின் படி,பார்-டெயில்ட் காட்விட் (லிமோசா லப்போனிகா), அலாஸ்காவிலிருந்து ஆஸ்திரேலிய மாநிலமான டாஸ்மேனியாவிற்கு 13,575 கிலோமீட்டர்கள் (8,435 மைல்கள்) உணவு அல்லது ஓய்வு எடுக்காம்ல்பறந்து சாதனையை முறியடித்தது.