Home உலகம் சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்ல விரும்பும் குடிமக்களுக்கான விசா அனுமதி

சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்ல விரும்பும் குடிமக்களுக்கான விசா அனுமதி

by Jey

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்றானது, சீனாவில் இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஆண்டு நவம்பரில் அதிகரிக்க தொடங்கியது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த சீன அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, வருகிற ஜனவரி 8-ந்தேதி (இன்று) முதல் வெளிநாடுகளில் இருந்து சீனாவுக்கு வர கூடிய விமான பயணிகளுக்கு கொரோனா கட்டுப்பாடுகளில் ஒன்றான தனிமைப்படுத்துதல் ரத்து செய்யப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எனினும், சீனாவுக்கு வரும் பயணிகள் 48 மணிநேரத்திற்குள் எடுத்த கொரோனா தொற்றில்லா சான்றை உடன் வைத்திருக்க வேண்டும். முக கவசம் அணிந்து வர வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று, சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்ல விரும்பும் குடிமக்களுக்கான விசா அனுமதியும் இன்று முதல் தொடங்கும் என தெரிவித்து உள்ளது.

related posts