கனடாவின் முக்கியமான ரயில் சேவைகளில் ஒன்றான Go ரயில் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
கால அட்டவணையின் பிரகாரம் குறிப்பிடப்படும் புறப்படும் நேரத்தை விடவும் ஒரு நிமிடம் முன்னதாக ரயில் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்த நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளது.
அறிவிக்கப்படும் புறப்படும் நேரத்தை விடவும் ஒரு நிமிடம் முன்கூட்டியே ரயில் கதவுகள் மூடப்பட்டு விடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சரியான நேரத்தில் பயணம் செய்யவும், சரியான நேரத்தில் ரயில் நிலையத்தை அடைவதற்கும இந்த நடைமுறை அறிமுகம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.