33 வயதான பிரிட்டோரியஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் டுவைன் பிரிட்டோரியஸ். இவர் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக ஆடி வருகிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு எனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடினமான முடிவு ஒன்றை எடுத்தேன்.
அது அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். எனது வாழ்க்கையில் தென் ஆப்பிரிக்கா அணிக்காக விளையாட வேண்டும் என குறிக்கோளுடன் இருந்தேன்.
அது எப்படி நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் கடவுள் எனக்கு திறமையையும் வெற்றிக்கான தீவிர விருப்பத்தையும் கொடுத்தார்.
மீதமுள்ளவை அவரது கைகளில் இருந்தன என்றார். இனி டி20 மற்றும் பிற குறுகிய வடிவத்திலான கிரிக்கெட்டில் எனது கவனத்தை திருப்ப உள்ளேன்.
இதைச் செய்வதன் மூலம், எனது தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையில் நான் சிறந்த சமநிலையைப் பெற முடியும். எனது வாழ்க்கையில் பெரும் பங்கு வகித்த அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்றார்.