நடிகை சமந்தா மயோசிடிஸ் என்கிற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார்.
சாகுந்தலம் படத்தின் உண்மையான ஹீரோ சமந்தா தான் என அப்படத்தின் இயக்குனர் குணசேகர் பாராட்டி பேசியதைக் கேட்டதும் எமோஷனல் ஆன சமந்தா, கண்ணீர் விட்டு அழுதார்.
இதன்காரணமாக கடந்த 4 மாதங்களாக அவர் எந்த படப்பிடிப்பிலும் கலந்துகொள்ளாமல் சிகிச்சை எடுத்து வந்தார். இடையே அவரது யசோதா திரைப்படம் ரிலீஸ் ஆனபோது மட்டும் அப்படத்திற்காக இரண்டு பேட்டிகளைக் கொடுத்திருந்தார்.
அதில் கடந்த சில மாதங்கள் தான் மிகவும் கஷ்டப்பட்டதாக கூறி அழுததை பார்த்து அவரது ரசிகர்கள் மனமுடைந்து போயினர். இதையடுத்து சிகிச்சையை தொடர்ந்து வந்த சமந்தா, புத்தாண்டுக்கு பின்னர் தான் புத்துணர்ச்சி உடன் தனது பணிகளை மீண்டும் செய்யத் தொடங்கி உள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மும்பை விமான நிலையத்திற்கு ஸ்டைலாக வந்திருந்த சமந்தாவின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி இருந்தன.