கனேடிய அரசாங்கம் பாரியளவு தொகை செலவிட்டு தாக்குதல் விமானங்களை கொள்வனவு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனேடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த விடயம் பற்றி தெரிவித்துள்ளார்.
எப்-35 ரக தாக்குதல் விமானங்களை கொள்வனவு செய்வதாக அவர் அதிகாரபூர்வமாக இன்றைய தினம் அறிவித்துள்ளார்.
அரசாங்கம் சுமார் 19 பில்லியன் டொலர்களை செலவிட்டு 88 தாக்குதல் விமானங்களை கொள்வனவு செய்ய உள்ளது.
முதல் தாக்குதல் விமானம் எதிர்வரும் 2026ம் ஆண்டில் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.