பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சடலங்காக மீட்கப்பட்டுள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சடலங்கள் மீட்டு எடுக்கப்பட்ட சம்பவத்திற்கும் பொது மக்களின் பாதுகாப்பிற்கும் எவ்வித அச்சுறுத்தல்களும் கிடையாது என பொலிஸார் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைக்கப்பெற்றால் அதனை வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.
எதனால் இந்த மரணங்கள் சம்பவித்தன என்பது பற்றிய விபரங்கள் எதனையும் பொலிஸார் இதுவரையில் வெளியிடவில்லை.