றொரன்டோ பொலிஸ் அவசர அழைப்புச் சேவை குறித்து அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
அழைப்பு மேற்கொள்ளப்பட்டு 24 மணித்தியாலங்கள் வரையில் காத்திருக்க நேரிட்டுள்ளதாக சிலர் தெரிவிக்கின்றனர்.
றொரன்டோவைச் சேர்ந்த 35 வயதான செர்கியோ டி இல்சார்ப் குடும்பத்தினர் கிறிஸ்மஸ் பண்டிகைக் கொண்டாட்டங்களுக்காக வெளியே சென்று வீடு திரும்பிய போது, வீடு உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டிருந்தது என தெரிவிக்கின்றனர்.
4000 முதல் 5000 டொலர்கள் வரையிலான பொருட்கள் காணாமல் போயிருந்தது என தெரிவிக்கின்றனர்.
உடனடியாக பொலிஸ் அவசர சேவைக்கு அழைப்பு எடுத்த போதிலும், 18 மணியத்தியாலங்களின் பின்னரே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான சில சம்பவங்களின் போது பொலிஸார் துரித கதியில் செயற்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.