கனடாவில் சைபர் தாக்குதல் சம்பவங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
கடந்த ஆண்டில் நாட்டில் சைபர் தாக்குதல் சம்பவங்கள் 20 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
உலக அளவில் சைபர் தாக்குதல்களின் எண்ணிக்கை 38 வீதத்தினால் உயர்வடைந்துள்ளதாகவும், வட அமெரிக்காவில் இந்த எண்ணிக்கை 58 வீதமாக உயர்வடைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கல்வி ஆய்வு, இராணுவம், அரசாங்கம் மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளை இலக்கு வைத்து அதிகளவில் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.