Home இந்தியா ராஜா அண்ணாமலை மன்றத்தில் கூட்டுறவு துறையின் கீழ் மகளிர் சுய உதவி

ராஜா அண்ணாமலை மன்றத்தில் கூட்டுறவு துறையின் கீழ் மகளிர் சுய உதவி

by Jey

சென்னை பிராட்வேயில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் கூட்டுறவு துறையின் கீழ் சென்னை மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடி, பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்குதல் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு புதிய வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சி சென்னை மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பெரம்பூர் ஆர்.மகேஷ் தலைமையில் நடைபெற்றது. நிர்வாக இயக்குனர் அமல தாஸ் வரவேற்றுப் பேசினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ்களை வழங்கினார்கள்.

விழாவில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது:- மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தார்.

அதன் பேரில் முதல்-அமைச்சர் அதற்கென ஒரு தொகையை ஒதுக்கீடு செய்து தற்பொழுது அதை நடைமுறைப்படுத்தி வருகிறார். 251 குழுக்களுக்கு 4.98 கோடி வாரி வழங்கி மகளிரின் இன்னலை போக்கியவர் நமது முதல்வர்.

கடன் தள்ளுபடி பெற்றவர்கள் தொழில் செய்வதற்கு உதவியாக வருமுன் காப்போம் என்கின்ற வாசகத்திற்கு இணங்க 18 குழுக்களுக்கு 1.21 கோடி கடன் உதவியாக தந்திருப்பவர் நமது முதல்வர்.

பொதுமக்கள், தொழில் முனைவோர் அதிக வளர்ச்சி பெற வேண்டும் என்கின்ற நோக்கில் தமிழ்நாடு அரசு சார்பில் 452 பேருக்கு 3.18 கோடியை அவர்களது வாழ் வாதாரத்திற்காக கடனாக வழங்கக் கூடிய முதல்வர் நமது முதல்வர்.

கூட்டுறவுத் துறையைப் பொறுத்தவரையில் பயிர் கடன் தள்ளுபடி, நகை கடன் தள்ளுபடி, உட்பட அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்யக் கூடிய ஒரே துறை நமது அரசின் கூட்டுறவு துறை தான். இவ்வாறு அவர் பேசினார்.

related posts