இலங்கைக்கு உதவும் வெளிநாட்டு தரப்புக்கள் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டுமாறு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென தென் ஆசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஜனாதிபதி பதவியில் மாற்றம் செய்ததன் காரணமாக எவ்வித முன்னேற்றமும் கிடையாது என மனித உரிமை கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்காமை, ஊழல் மோசடிகள், முறையற்ற முகாமைத்துவம், சட்டம் ஒழுங்கை மலினப்படுத்தியமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை எதிர்த்து மக்கள் கடந்த ஆண்டில் வீதியில் இறங்கி போராட்டம் செய்தனர்.
பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு வரும் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியிலிருந்து விலகின்றார்.
அதனைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி ஏற்றுக் கொண்டார்.
ரணில் விக்ரமசிங்கவும் போராட்டக்காரர்களை ஒடுக்கியதுடன், சட்ட ரீதியான போராட்டங்களை தடுத்தார் எனவும், கடந்த கால குற்றச் செயல்களுக்கு நியாயம் வழங்கவில்லை எனவும், மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென் ஆசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.
பொறுப்புகூறல் மற்றும் மறுசீரமைப்புக்களை செய்வதற்காக விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு ரணில், அடக்குமுறைகளின் ஊடாக பதிலளித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.