இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டனில் நேற்று பகல்-இரவு மோதலாக நடந்தது. இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹலுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார்.
இலங்கை அணியில் காயமடைந்த மதுஷன்கா, பதும் நிசாங்கா ஆகியோர் நீக்கப்பட்டு நுவானிது பெர்னாண்டோ, லாஹிரு குமாரா இடம் பிடித்தனர்.
‘டாஸ்’ ஜெயித்த இலங்கை கேப்டன் ஷனகா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி புதுமுக வீரர் நுவானிது பெர்னாண்டோவும், அவிஷ்கா பெர்னாண்டோவும் இலங்கை அணியின் இன்னிங்சை தொடங்கினர். அவிஷ்கா 20 ரன்னில் முகமது சிராஜியின் பந்து வீச்சில் போல்டு ஆனார்.
2-வது விக்கெட்டுக்கு நுவானிது பெர்னாண்டோவும், குசல் மென்டிசும் ஜோடி சேர்ந்து அணியை தூக்கி நிறுத்தினர். 16.1 ஓவர்களில் அந்த அணி 100 ரன்களை எட்டி நல்ல நிலையில் இருந்தது. ஆனால் இந்த கூட்டணி உடைந்ததும் ஆட்டத்தின்
போக்கு தலைகீழாக மாறியது.