கனடாவில் பெண் பற்றிய தகவல் வழங்கினால் ஒருலட்சம் டொலர் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றாரியோவின் வசாகா பீச் பகுதியில் ஓராண்டுக்கு முன்னதாக எல்னாஸ் ஹஜ்தாமாரி என்ற பெண் கடத்தப்பட்டிருந்தார்.
போலியான பொலிஸ் சீருடை அணிந்த மூன்று பேர் இந்த பெண்ணை கடத்திச் சென்றுள்ளனர்.
கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் உருவப்படங்கள் வரையப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் பற்றியோ அல்லது கடத்தல் பற்றியோ தகல்வள் வழங்கப்பட்டால் ஒரு லட்சம் டொலர் சன்மானம் வழங்கப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.