Home விளையாட்டு சீன அணியை வீழ்த்தி அறை இறுதிக்கு முன்னேறிய இந்திய அணி

சீன அணியை வீழ்த்தி அறை இறுதிக்கு முன்னேறிய இந்திய அணி

by Jey

மலேசிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவு கால்இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி, சீனாவின் லி யு சென்- ஓ ஸியான் யி ஜோடியுடன் மோதியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 17-21, 22-20, 21-9 என்ற செட் கணக்கில் சீன அணியை வீழ்த்தி அறை இறுதிக்கு முன்னேறியது.

66 நிமிடங்களில் வெற்றியை சுவைத்த சாத்விக்-சிராக் ஷெட்டி அரை இறுதி சுற்றில் சீனாவின் லியாங் வெய் கெங்- வாங் சாங் ஆகியோரை சந்திக்கிறார்கள்.

related posts