நயகரா சென் கெதரீன்ஸ் தீ விபத்துச் சம்பவத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
கைத்தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்த நபர் உயிரிழந்துள்ளார்.
நிறுவனத்தில் பணியாற்றிய பணியாளர் ஒருவரே சம்பவத்தில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரே இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்த பத்து நாட்கள் தேவைப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தக் காலப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளுக்கு மக்களோ ஊடகவியலாளர்களோ வருகை தருவதனை தவிர்த்துக் கொள்ளுமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.