தென்னிந்தியாவில் முன்னணி கதாநாயகியாக திகழும் ராஷ்மிகா மந்தனா, பாலிவுட்டிலும் தனது திறமையை காட்டி வருகிறார். சினிமாக்களில் மட்டுமின்றி, நிஜ வாழ்க்கையிலும் எப்போதும் உற்சாகமாக இருப்பது அவரது பழக்கம்.
அவரிடம் பேசியதில் இருந்து.. சினிமாவுக்கு வந்து குறைந்த காலத்திலேயே பெயரும், புகழும் பெற்று விட்டீர்கள். அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்? சினிமாவுக்கு வந்து 6 ஆண்டுகள் ஆகிவிட்டன.
எவ்வளவோ திறமையான, அழகான நடிகைகள் இருந்த போதிலும், சினிமாவுக்கு வந்தது முதலே அனைத்து மொழிகளிலும் மிகச்சிறந்த வாய்ப்புகள் கிடைத்தது எனது அதிர்ஷ்டம். என்னுடைய உழைப்பு, எனக்கு கிடைக்கும் வாய்ப்புகள், எனது இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்த ரசிகர்கள், எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளின் ஆசிர்வாதம் தான் எனது வளர்ச்சிக்குக் காரணம்.
சினிமாவில் நீங்கள் கற்றுக்கொண்டது என்ன? பொறுமை, இரக்கம், தன்னடக்கம் இப்படி எத்தனையோ விஷயங்களை சினிமா எனக்கு கற்றுக் கொடுத்தது. நான் எப்படி ஆசைப்படுகிறேனோ, அப்படியே பொதுமக்களும் என்னைப் பார்க்கிறார்கள்.
நான் மற்றவர்களின் நேரத்தையும், முயற்சிகளையும் மிகவும் மதிக்கிறேன். ஒரு நடிகையாக தினமும் ஏதோ ஒரு புதிய விஷயத்தை கற்றுக்கொள்கிறேன். இதெல்லாம் என்னோடு சேர்ந்து பணியாற்றும் அனைவரின் மூலமாகவே சாத்தியமானது.