Home இலங்கை உத்தியோகபூர்வ இல்லத்துக்குச் செல்லவுள்ள முன்னாள் ஜனாதிபதி

உத்தியோகபூர்வ இல்லத்துக்குச் செல்லவுள்ள முன்னாள் ஜனாதிபதி

by Jey

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு செல்வார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த வீட்டின் புனரமைப்பு காரணமாக, முன்னாள் ஜனாதிபதி ஸ்டென்மோர் க்ரெசன்ட்டில் அமைந்துள்ள மற்றொரு உத்தியோகபூர்வ இல்லத்தில் வசித்து வந்தார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி காலத்தில், விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தை புனரமைப்பதற்காக 400 மில்லியனுக்கும் அதிகமான மதிப்பீடு முன்வைக்கப்பட்டது,

ஆனால் கோட்டாபய ராஜபக்ஷவினால் அது நிறைவேற்றவில்லை. ஆனால் பின்னர் ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க இந்த உத்தியோகபூர்வ இல்லத்தை புனரமைப்பதற்காக 800 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை வழங்க அனுமதி வழங்கினார். இந்த வீட்டை புதுப்பிக்க இன்னும் அதிக பணம் செலவிட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மஹிந்த ராஜபக்சவின் புதல்வர்களும் வசிக்கும் வகையில் வீட்டில் சில புதிய விடயங்கள் இணைக்கப்பட்டுள்ளதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக்ஷ அந்த வீட்டுக்கு சென்றதையடுத்து, கோட்டாபய ராஜபக்ஷ, ஸ்டென்மோர் க்ரெசன்ட்டில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்துக்குச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் தற்போது பௌத்தலோக மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் வசித்து வருவதாகவும், வாகனங்களின் ஹோர்ன்களின் சத்தம் அதிகமாக ஒலிப்பதால், தனக்கு வேறு வீடு வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

related posts