கனடாவில் வீட்டு விலைகளில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டில் கனடாவில் வீடுகளின் விலைகள் 12 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் சராசரியாக 626318 டொலர்கள் என்ற அடிப்படையில் வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2021ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது வீடுகளின் விற்பனை 39 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.