ரூ.4 கோடியில் பணி பொங்கலூர் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து தேவனம்பாளையம் வழியாக திருப்பூருக்கு செல்லும் தார்ச்சாலை உள்ளது. இந்த தார்ச்சாலை தேவனாம்பாளையம் வரை சாலை அகலப்படுத்தும் பணி மற்றும் பாலம் அகலப்படுத்தும் பணி ரூ.4 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டது.
பொங்கலூரில் இருந்து தேவனம்பாளையம் செல்லும் சாலையில் கடந்த 7 மாதங்களாக பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடப்பதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த சாலை பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வந்தது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் தார் சாலை பணிகள் முடிவுற்றது.
இந்த தார் சாலை பணிகள் நடைபெற்ற போது இந்த வழியாக தடுப்புகள் அமைக்கப்பட்டதால் பல கிலோமீட்டர் சுற்றி திருப்பூர் செல்ல வேண்டிய நிலை பொது மக்களுக்கு ஏற்பட்டது.
இந்த நிலையில் இந்த சாலையில் பி.ஏ.பி வாய்க்கால் குறுக்காக ஏற்கனவே இருந்த பாலத்தை அகலப்படுத்தும் பணி தொடங்கப்பட்டது. இந்த பணியும் மிக மிக மெதுவாக தொடங்கப்பட்டது.