கனடாவின் வருடாந்த பணவீக்க வீதம் சற்றே வீழ்ச்சியடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த டிசம்பர் மாதம் கனடாவின் பணவீக்கம் 6.3 வீதமாக காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கனடாவின் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் நுகர்வோர் விலைச்சுட்டியின் ஊடாக இந்த பணவீக்க வீத வீழ்ச்சியை அடையாளம் காண முடிகின்றது.
கனடாவில் மளிகைப் பொருட்களுக்கான விலைகள் 11 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதத்தை விடவும் டிசம்பர் மாதம் பணவீக்க வீதம் குறைவடைந்துள்ளது.
எரிபொருளுக்கான விலை வீழ்ச்சியானது பணவீக்க வீழ்ச்சிக்கு பிரதான ஏதுவாக அமைந்துள்ளது.