Home விளையாட்டு சதம் அடிக்க முடியாமல் தடுமாறிய விராட் கோலி

சதம் அடிக்க முடியாமல் தடுமாறிய விராட் கோலி

by Jey

சர்வதேச கிரிக்கெட்டில் சுமார் ஆயிரம் நாட்கள் சதம் அடிக்க முடியாமல் தடுமாறி வந்தார் விராட் கோலி. ஆனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டி20 யில் சதம் அடித்த பின்னர் கோலியின் ஆட்டம் வெகுவாக மாறியுள்ளது. அவர் 3 சதங்களை வெறும் 30 நாட்கள் இடைவெளியில் பதிவு செய்துள்ளார். அவர் கடைசியாக விளையாடிய 4 ஒருநாள் போட்டிகளில் 3 சதங்களை பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை மற்றொரு இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலி முறியடிப்பாரா என்ற கேள்விக்கு சுனில் கவாஸ்கர் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

சச்சின் 40 வயது வரை விளையாடினார். அதற்கான உடல் திறனோடும் அவர் இருந்தார். கோலியும் பிட்னஸ் விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி வருபவர். ஆண்டுக்கு 6-7 சதங்கள் வீதம் அவர் பதிவு செய்தால் அடுத்த 5 அல்லது 6 ஆண்டுகளில் 100 சதம் என்ற மைல்கல்லை அவர் எட்டுவார். அதற்கு அவர் 40 வயது வரை விளையாட வேண்டும். அந்த வயதில் அவர் விளையாடினால் அதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. அதற்கு நல்ல உடல்தகுதியுடன் இருக்க வேண்டும்.

related posts