Home இலங்கை இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதாக இந்தியா

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதாக இந்தியா

by Jey

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதாக இந்தியா சர்வதேச நாணயநிதியத்திற்கு தெரிவித்துள்ளதாக இந்த விடயங்கள் குறித்து நன்கறிந்த தரப்பொன்று தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து இலங்கை 2.9 மில்லியன் கடன் உதவியை பெறுவதற்கான தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 1948ஆம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து சுதந்திரத்தை பெற்ற பின்னர் இலங்கை எதிர்கொண்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியை நாட்டின் 22 மில்லியன் மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.

இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதியநேர செய்திகளின் தொகுப்பு,

 

related posts