ஒன்றாரியோ மாகாணத்தில் மற்றுமொரு மனித புதைகுழி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
ஒன்றாரியோவின் பழங்குடியின சமூகத்தினால் இந்த சந்தேகத்திற்கு இடமான மனித புதைகுழி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
பாரியளவிலான இந்த மனித புதை குழி கண்டு பிடிக்கப்பட்டதனால் பழங்குடியின சமூகம் பேரதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒழுங்கற்ற சுமார் 171 பேரின் சடலங்கள் புதைக்கப்பட்ட பாரிய மனித புதை குழியாக இது அமைந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
பாரிய மனித புதைகுழி மீட்பு குறித்த செய்தி சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாக பழங்குடியினத் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த மே மாதம் முதல் குறித்த பகுதியில் புதை குழிகள் தொடர்பில் ராடார் மூலம் ஆய்வு நடாத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.