Home இந்தியா எழுத படிக்க தெரியாதோர் யாரும் இல்லாத நிலையை உருவாக்குவோம்

எழுத படிக்க தெரியாதோர் யாரும் இல்லாத நிலையை உருவாக்குவோம்

by Jey

கீழ்பென்னாத்தூர் வட்டார வளமையம் சார்பில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ், புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலத்துக்கு தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் ராமமூர்த்தி (நிலை2) முன்னிலை வகித்தார்.

வட்டார வளமைய மேற்பார்வையாளர் செல்வம் வரவேற்றார். ஊர்வலத்தை வட்டார கல்வி அலுவலர் மோகன் (நிலை 1) கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கிய ஊர்வலம் முக்கியத் தெருக்கள் வழியாக சென்று வட்டார வள மையத்தை அடைந்தது.

இதில் கல்லாமையை இல்லாமை ஆக்குவோம் திட்டம், 15 வயதுக்கு மேற்பட்ட எழுத்தறிவு இல்லாத அனைவரையும் உடனடியாக பள்ளியில் சேர்ப்போம், எழுத படிக்க தெரியாதோர் யாரும் இல்லாத நிலையை உருவாக்குவோம்.

கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தை 100 சதவீதம் எழுத்தறிவு பெற்ற ஒன்றியமாக மாற்றுவோம். என்பன உள்பட பல்வேறு விழிப்புணர்வு கோஷங்களை மாணவர்கள் எழுப்பியவாறு சென்றனர்.

ஊர்வலத்தில் ஆசிரியர் பயிற்றுனர்கள் சம்பத், அனிதா, லட்சுமி, நாராயணன், மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் முருகன், ஜெயகாந்தன், உடற்கல்வி ஆசிரியர் ஆரிமுத்து மற்றும் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

related posts