கனடாவில் மீண்டும் வட்டி வீதம் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் மத்திய வங்கி இந்த விடயத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
பணவீக்கத்தில் சாதக நிலை ஏற்பட்ட போதிலும் மத்திய வங்கி இவ்வாறு வட்டி வீதத்தை மேலும் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளது.
கடந்த 2007ம் ஆண்டின் பின்னர் இந்த ஆண்டில் மத்திய வங்கியின் வட்டி வீதம் 4.5 வீதமாக உயர்வடைந்துள்ளது.
கடந்த காலங்களில் நாட்டின் பணவீக்கம் 8.1 வீதமாக உயர்வடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.