திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.
கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி முன்னிலை வகித்தார். திருவண்ணாமலை வேளாண்மை இணை இயக்குனர் அரக்குமார் வரவேற்றார்.
கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
அப்போது திருவண்ணாமலையை அடுத்த தேவனாம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஜெயவேல் என்ற விவசாயி, தனக்கு கடந்த 3 ஆண்டுகளாக பயிர் காப்பீட்டு தொகை வரவில்லை. இதற்காக பலமுறை மனு அளித்தும் உரிய பதில் கிடைக்கவில்லை.
தனக்கு பயிர் காப்பீட்டு தொகை குறித்த உரிய பதிலை இந்த கூட்டத்தில் தெரிவிக்காவிட்டால் பூச்சி மருந்து குடிக்க போவதாக பூச்சி மருந்து பாட்டிலை எடுத்து காண்பித்தார்.