Home உலகம் குரங்குகளைப் பிடித்து கொலை செய்யவுள்ள நாடு

குரங்குகளைப் பிடித்து கொலை செய்யவுள்ள நாடு

by Jey

வெர்வெட்’ குரங்குகள் தெற்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவை ஆகும். இந்த வகை குரங்குகள் 17-ம் நூற்றாண்டில் கரீபியன் தீவுப்பகுதிகளை வந்தடைந்தன. இந்நிலையில், கரீபியன் நாடான சின்ட் மார்டனில் ஒட்டுமொத்த வெர்வெட் குரங்குகளையும் அழிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வகை குரங்குகள் தங்கள் விவசாய நிலங்களில் பயிர்களைத் தாக்கி வாழ்வாதாரத்தையே அழித்து வருவதாக விவசாயிகள் தொடர்ந்து புகாரளித்து வந்தனர்.

இதனால் வெர்வெட் குரங்குகள் அப்பகுதி மக்களால் தொல்லையாக கருதப்பட்டு வந்துள்ளது. இதையடுத்து குரங்குகளைக் கொலை செய்ய அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. இருப்பினும் குரங்குகளைக் கொல்வதற்கு பதிலாக அவற்றிற்கு கருத்தடை செய்வது சிறந்த வழியென்று விலங்கு நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசு நிதியுதவியில் தொண்டு நிறுவனம் மூலம் அடுத்த 3 வருடங்களில் சுமார் 450-க்கும் அதிகமான குரங்குகளைப் பிடித்து கொலை செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.

related posts